ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவுகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கைக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மஹரகம – இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் தற்போது நடைபெற்று வரும் கட்சியின் 71 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற அகில இலங்கை குழுக் கூட்டத்திலேயே இதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இது தொடர்பான யோசனைகளை அகில இலங்கை குழுவிடம் முன்வைத்ததுடன், கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பான வாக்கெடுப்பை நடத்தினார்.

அகில இலங்கை குழு உறுப்பினர்களுக்கு கைகளை உயர்த்தி ஆதரவை தெரிவிக்குமாறு தலைவர் தெரிவித்ததுடன், பெரும்பான்மையான உறுப்பினர்கள் கைகளை உயர்த்தி ஆதரவு வழங்கினர்.

இதனையடுத்து, தமது அதிருப்தியை வெளிப்படுத்திய அகில இலங்கைக் குழு உறுப்பினர்களை கைகளை உயர்த்துமாறு கட்சியின் தலைவர் தெரிவித்த போதிலும், அவர்கள் எவரும் அப்போது தமது அதிருப்தியை வெளிப்படுத்த கைகளை உயர்த்தவில்லை.

இதன்படி, கட்சியின் அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பான யோசனைகள் அகில இலங்கைக் குழுவில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டதாக கட்சியின் தலைவர் அறிவித்தார்.

Share.
Exit mobile version