Ameen Zaky வின் Facebook பதிவில் இருந்து

அக்கரைப்பற்றில் நடந்த மனதை நொறுக்கிய பிந்திய ஜனாஸா தகவல்.
நாய்க்கடிக்கு இலக்கான (இரண்டரை வயதுடைய) சின்னஞ்சிறு குழந்தையின் உயிர்…
கடந்த 2022-08-26 வெள்ளி கிழமை அன்று பிரிந்தது
(இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்)
கடந்த மாதம் (2022-07-13) அன்று
அக்கரைப்பற்று ஐனா பீச் பின்னால் உள்ள
வீட்டில் திருமண நிகழ்வு இடம்பெற்றது…

அந்த திருமண நிகழ்வின் போது இந்த குறித்த குழந்தை விளையாடிக்கொண்டு இருந்த போது அவ்விடத்தில் நின்ற நாய் பிள்ளையின் மேல் பாய்ந்துள்ளது.
அதை கண்ட ஒரு பெண் கதிரையால் நாயை தாக்கி விரட்டியடிததின் பின் பிள்ளையின் நெற்றியில் காயம் ஏற்பட்ட இருப்பதை கண்டு.
அ.பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது காயம் நாய் கடித்ததா இல்லை நாயை தாக்கும் போது கதிரை பட்டு காயம் எற்பட்டதா எனும் சந்தேகம் வைத்தியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகு வைத்தியர்கள் பெற்றோரிடம் கூறி உள்ளார்கள் நாய் கடித்து இருந்தால் அதற்கான தடுப்பூசி எம்மிடம் இல்லை மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றுவோம் என்று கூறிய போது.

பெற்றோர்கள் கூறி உள்ளார்கள் இல்லை இது கதிரைதான் பட்டு இருக்கும் என்று கூறி தங்களின் விருப்பத்துக்கு டிக்கட்டினை வெட்டி வீடு திரும்பி வந்துள்ளனர்.
அதற்கு பிறகு அதை பற்றி பெற்றோர்கள் கவனம் கொள்ளவில்லை.
சம்பவம் நடந்து 15 நாட்களுக்கு பிறகு 07-28 அன்று குடும்பத்தோடு குருனாகல் பரகாதெனியவில் உள்ள அவர்களின் சகோதரியின் வீட்டுக்கு சென்றவர்கள் அங்கேயே தங்கி விட்டார்கள். அதன் பிறகு அங்கே வைத்து.
சென்ற வியாழக்கிழமை பிள்ளைக்கு திடிரென சுகவீனம் ஆகியதை அடுத்து குருனாகல் வைத்தியசாலையில் அனுமதித்த போது பரிசோதித்த வைத்தியர்கள் பெற்றோரிடம் கேட்டு உள்ளார்கள் பிள்ளைகளுக்கு மிருகம் ஏதும் கடித்ததா என்று.

அதற்கு பிறகு தான் பெற்றோர்க்கு புரிந்துள்ளது அன்று நாய் கடித்த காயம்தான் அது என்று.
அதன் பிறகு வைத்தியர்களிடம் மொட்டையாக கூறி உள்ளார்கள் ஓம் நாய் கடித்த என்று.
வைத்தியர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் விஷ கிருமிகள் மூலையில் பரவியதால் வெள்ளி கிழமை அன்று பிள்ளையின் உயிர் பரிதாபமாக பிரிந்தது .
அ.பற்று வைத்தியசாலையில் கதிரை அடிபட்ட காயம்
என்று அறிக்கை எழுதப்பட்டுள்ளதாலும்
குருனாகல் வைத்தியசாலையில் நாய் கடித்தது என்று பெற்றோர்கள் மொட்டையாக சொன்னதினால் அங்கு வைத்திய அறிக்கை நாய் கடித்தது என்று எழுதப்பட்டதினாலும்.
வைத்தியசாலையில் இருந்து ஜனாஸாவை பெருவதில் பல சட்ட சிக்கல்களும் தாமதங்கலும் ஏற்பட்டுள்ளது

அல்லாஹ்வின் உதவியால் அ.பற்றில் இருந்து பலர் உதவியதால் பொலிஸ் அறிக்கை பெக்ஸில் கிடைக்கப்பட்ட பின் ஜனாஸா சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கிடைக்கப்பட்டு அன்று இஷா தொழுகையைத் தொடர்ந்து பரகாத்தெனிய மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இது இரட்டையாக பிறந்த குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புடைய பெற்றோர்களே..!
உமது பிள்ளைகளை மிகக் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.விலை மதிப்பற்ற குழந்தைச் செல்வங்களை ஏனோ தானோ என்று விட்டு விடாதீர்கள்.காலங்கடந்து ஞானம் பிறப்பதில் எவர்க்கும் பிரயோசனமில்லை.

Share.
Exit mobile version