அரச மற்றும் அரை அரச ஊழியர்களின் ஓய்வூதியம் பெறும் வயதெல்லையை 60ஆக குறைக்கும் யோசனையொன்றை முன்வைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக குறித்த வயதெல்லை 65ஆக அதிகரிக்கப்பட்டிருந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், ஓய்வூதிய வயதெல்லையில் திருத்தம் மேற்கொள்வதன் ஊடாக அரச துறையில் ஏற்பட்டுள்ள தொழில்வாய்ப்பு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமெனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.
நாடாளுமன்றில் இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.