ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியும் பங்களாதேஷ் அணியும் மோதவுள்ளன.

இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு சார்ஜா மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.

குழு ‘பி’ பிரிவில் நடைபெறவுள்ள இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு மொஹமட் நபியும் பங்களாதேஷ் அணிக்கு சகிப் அல் ஹசனும் தலைமை தாங்கவுள்ளனர்.

கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version