அந்நிய செலாவணி கையிருப்பு குறைவதால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை போக்க வெளிநாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

இந்த அந்நிய செலாவணி நன்கொடை மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று மத்திய வங்கி தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அந்நியச் செலாவணி பெறுகைகள் மற்றும் அவற்றின் பயன்பாடு என்பவற்றை வெளிப்படைத் தன்மையை பேணுவதற்காக மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றையும் மத்திய வங்கியின் ஆளுநர் நியமித்துள்ளார்.

நன்கொடைகள் தொடர்பான தகவல்களை fdacc@cbsl.lk என்ற மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Share.
Exit mobile version