இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில், செனட்டர் ஜோன் ஓசாஃப் குழுவினர் நாளை(செவ்வாய்கிழமை) இந்தியாவிற்கு எட்டு நாள் விஜயமாக வருகை தரவுள்ளனர்.

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தின் வரலாற்று நிகழ்வில் இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது அமெரிக்க செனட்டர் ஓசாஃப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

‘நம் நாடுகளுக்கிடையேயான நட்பை வலுப்படுத்தவும், அடுத்த தலைமுறை இந்தியத் தலைவர்களைச் சந்திக்கவும் நான் வருகிறேன்’ என ஓசாஃப் கூறினார். 35 வயதான ஓசாஃப், இளம் அமெரிக்க செனட்டர் ஆவார்.

அவரது அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ஜோர்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த அமெரிக்க செனட்டர் ஜோன் ஓசாஃப் இந்தியாவுக்கு எட்டு நாள் பொருளாதாரக் உறுப்பினர்களுடன் வருகை தரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜோர்ஜியாவில் உள்ள இந்திய அமெரிக்க சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவும் நாங்கள் பணியாற்றுவோம், அங்கு வளர்ந்து வரும் இந்திய புலம்பெயர்ந்தோர் எங்கள் சமூகத்தின் செழிப்பான மற்றும் அன்பான பகுதியாக உள்ளனர்’ என செனட்டர் ஓசோஃப் மேலும் கூறினார்.

அவர், தனது பயணத்தின் போது,  அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார, அறிவியல், கலாசார மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார்.

அமெரிக்க செனட்டர் ஓசாஃப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜோர்ஜியா மாநிலம், நூறாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்களைக் கொண்டுள்ளது.

செனட்டர் ஓசோஃப் சர்வதேச செய்தி நிறுவனங்களுக்காக ஊழல், போர்க்குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்தை விசாரித்து அம்பலப்படுத்திய குழுவை வழிநடத்தினார்.

2021 இல், அவர் ஜனநாயகக் கட்சிக்கு செனட் பெரும்பான்மையைப் பெறுவதற்கான தேர்தலின்போது, முக்கியமான பின்தங்கிய பகுதிகளில் வெற்றி பெற்றார்.

பதவியில் இருந்த முதல் இரண்டு ஆண்டுகளில், செனட்டர் ஓசோஃப், சிவில் உரிமைகளை வலுப்படுத்தவும், உள்நாட்டு சூரிய ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்கவும், பொதுசுகாதாரத்தை மேம்படுத்தவும் சட்டத்தை எழுதி நிறைவேற்றினார்.

அதேநேரத்தில் செனட்டின் நிரந்தர துணைக்குழுவின் தலைவராக துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் பற்றிய இருதரப்பு விசாரணைகளையும் அவர் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version