ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
இது ஜனாதிபதியினுடைய மாளிகையில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில், அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து புதிய அரசாங்கத்தினை அமைப்பதற்கு நிறைவேற்று ஜனாதிபதி என்கின்ற வகையில், தாம் இணங்குவதாகவும் அரசாங்கத்தினில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி எழுத்துமூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
நாட்டின் தற்போதைய பிரதமரும், அமைச்சரவையும் பதவி விலகியதன் பின்னர். அனைத்துக் கட்சி அரசாங்கத்த்தினை அமைக்க ஜனாதிபதி இணங்கிஇருக்கின்றார்.
இதற்கமைவே, முதல் கட்டமாக நாளை தினம் (29) ஜனாதிபதி மாளிகைனுள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற சகல கட்சிகளுக்குமான விசேட கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.