இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு அனைத்து சேவைகளிலிருந்தும் விலகுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரி அனைத்து அரச, தனியார் மற்றும் அரை அரச துறைகளின் பங்குபற்றுதலுடன் நாளை பாரிய தொழிற்சங்க நடவடிக்கையாக இது முன்னெடுக்கப்படுகிறது.

கொழும்பிலுள்ள மத்திய அஞ்சல் பரிவர்த்தனை உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள 653 தபால் நிலையங்கள் மற்றும் 3,410 உப தபால் நிலையங் களில் பணியாற்றும் அனைத்து தபால் ஊழியர்களும் நள்ளிரவில் சேவையிலிருந்து விலகுவதாக கூட்டணியின் ஒருங்கிணைப் பாளரான சிந்தக பண்டார தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு ஏற்படும் சுமைகளை கருத்திற் கொண்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாழும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும், குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதிப்படுத் தவும், பொருத்தமான ஆட்சி முறையை பொதுமக்களுக்கு உருவாக்கவும் அரசாங்கத்தை இராஜினாமா செய்யுமாறு தாம் கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Share.
Exit mobile version