ஹசலக்க, கங்கேயாய, பஹே-எல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 16 வயதுடைய அனுத்தரா இந்துனில் என்ற பாடசாலை மாணவி ஒருவர் இன்று (28) காலை உயிரிழந்துள்ளார்.

பஹே-எல என்பது காட்டு யானைகளின் தாக்குதல்களை அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு கிராமமாகும். அதே நேரத்தில் விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதோடு கிராம மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறப்படுகிறது.

இச்சிறுமி, 14 நாட்களுக்கு முன்னர் யானை தாக்கி உயிரிழந்த தனது சகோதரரின் ஆத்ம சாந்தி பிரார்தனைகளுக்காக பெற்றோருடன் விகாரைக்கு சென்று கொண்டிருந்தபோதே, யானை தாக்குதலுக்கு இலக்கானார்.

பின்னர், அவர் ஹசலக்க வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சிறுமி நாளை ஆரம்பமாகவுள்ள சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைக்கு தயாராகி வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

காட்டு யானைகளின் அட்டகாசத்திற்கு உரிய தீர்வை அதிகாரிகள் வழங்காவிடின் மேலும் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாவதை தடுக்க முடியாது என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

Share.
Exit mobile version