எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று காலை மாவனெல்லையில் இருந்து கலிகமுவ வரை தொடரவுள்ளது.
இந்த எதிர்ப்பு ஊர்வலம் அரசாங்கத்தின் ஆட்சிக்கு எதிரான ஒற்றுமையின் சின்னம் என எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இந்த எதிர்ப்புப் பேரணியில் நேற்று கணிசமானோரின் பங்கேற்பு காணப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினரான ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.
‘தேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு இலங்கையர்கள் ஒன்றிணைய வேண்டும்’ என்பதே இந்த எதிர்ப்புப் பேரணியின் தொனிப்பொருள் என அவர் தெரிவித்தார்.
இந்த எதிர்ப்புப் பேரணி எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி கொழும்பை வந்தடைய வுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.