கொரோனாவை காரணம் காட்டி அமெரிக்காவின் 26 விமான சேவைகளை சீனா இரத்துச் செய்துள்ளமைக்கு பதிலடியாக, அமெரிக்காவும் சீன விமான நிறுவனங்களின் 26 விமான சேவைகளை இரத்து செய்துள்ளது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், யூனைடெட் ஏர்லைன்ஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் 26 விமான சேவைகளை சீனா இரத்து செய்துள்ளது. இதற்கு பதிலடியாக சீனாவின் ஷியாமென், ஏர் சீனா, சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் மற்றும் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஆகிய 4 விமான நிறுவனங்களின் 26 விமான சேவைகளை அமெரிக்காவும் இரத்து செய்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பொறுப்பற்ற செயல் என்று வொஷிங்டனில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் இருந்து புறப்படும் போது கொரானா தொற்று இல்லாத பயணிகளுக்கும் சீனா சென்ற பின் தொற்று உறுதி செய்யப்படுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.