2035 ஆம் ஆண்டுக்குப் பிறகு, கலிபோர்னியா மாநில அதிகாரிகள் பெற்றோலில் இயங்கும் வாகன விற்பனையைத் தடை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இது வரலாற்று சிறப்புமிக்க முடிவு என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

“காலநிலை மாற்றத்தை” கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதே இதன் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது.

இந்த புதிய சட்டமானது, “புதைபடிவ எரிபொருள் பாவனையற்ற” கார்களை உற்பத்தி செய்ய வாகன உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் என்று கூறப்படுகிறது.

இதுவரை நோர்வே, நெதர்லாந்து, பிரான்ஸ், யுனைடெட் கிங்டம் மற்றும் டென்மார்க் உட்பட ஐரோப்பாவின் பல நாடுகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட கலிபோர்னியா, புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தாத வாகனத் தொழிலை ஊக்குவிக்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஆளுநர் கவின் நியூசோம் குறிப்பிட்டார்.

Share.
Exit mobile version