இலங்கை எதிர்கொண்டுள்ள பெற்றோலிய நெருக்கடிக்கு தீர்வாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரணையுடன் 300 முச்சக்கர வண்டிகளை மின்மயமாக்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் தொடர்பான சட்டப் பின்னணியை தயாரிப்பதற்கான முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ளும் விசேட மாநாடு எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாகவும் இத்திட்டத்தின் தொழில்நுட்ப ஒழுங்குமுறைகள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Share.
Exit mobile version