உலகின் அதிக ஊதியம் பெறும் டென்னிஸ் வீரர்களின் பட்டியலின் முதல் இடத்தை உலகின் முன்னாள் முதல்நிலை வீரர் ரொஜர் பெடரர் தொடர்ந்தும் தக்கவைத்துள்ளார்.

14 மாதங்களாக ஒரு போட்டியில் விளையாடாமல் இருந்த போதிலும் 17வது ஆண்டாக அவர் தமது முதலாவது இடத்தைத் தக்கவைத்துள்ளார் என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

41 வயதான ஃபெடரர், முழங்காலில் மற்றொரு அறுவை சிகிச்சை செய்த பின்னர் கடந்த ஆண்டு விம்பிள்டனில் இருந்து போட்டிகளில் பங்கேற்கவில்லை.

20 முறை கிராண்ட் ஸ்லாம் வெற்றியாளரான அவர் கடந்த 12 மாதங்களில் 90 மில்லியன் டொலர்களை ஊதியமாக பெற்று பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஜப்பானின் நவோமி ஒசாகா, கடந்த ஆண்டில் சுமார் 56.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்து பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அவரே அதிக ஊதியம் பெறும் பெண் டென்னிஸ் வீராங்கனை ஆவார்.

23 முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற செரீனா வில்லியம்ஸ் இந்த ஆண்டு 35.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்று முன்னர் ஆண்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ரஃபா நடால் (31.4 மில்லியன்) மற்றும் நோவக் ஜோகோவிச் (27.1 மில்லியன்) ஆகியோரை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

Share.
Exit mobile version