நாளைய தினம் (26) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணிநேரமும் 40 நிமிடங்களுக்கும் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணி நேரமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளது.
மேலும் கொழும்பு முன்னுரிமை வலயங்களில் (CC) காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியினுள் 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.