கடந்த 23ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட 305 வகையான பொருட்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக தடை செய்வதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்தது.

குறித்த தடை நேற்று முதல் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என இறக்குமதி – ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், கடந்த 23 ஆம் திகதி முதல் ஏற்றுமதி செய்யப்பட்ட, செப்டெம்பர் 14க்கு முன்னர் நாட்டை வந்தடையவுள்ள பொருட்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது மேலும் கட்டுப்படுத்தப்படும் பொருட்களில் தொலைபேசிகள் மற்றும் பாகங்கள் ஆகியவை அடங்கும்.

இதேவேளை, அண்மையில் விதிக்கப்பட்ட இந்த இறக்குமதிக் கட்டுப்பாடுகளில் கையடக்கத் தொலைபேசி பெட்டரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் கையடக்கத் தொலைபேசி பெட்டரிகளின் விலையும் அதிகரிக்கும் என கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version