கோட்டா கோகம போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள டான் பிரியசாத் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக்க ஆகியோரின் கையடக்க தொலைபேசிகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் இன்று ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைத்தொலைபேசிகள் கையளிக்கப்படும் வரை சந்தேகநபர்களை நீதிமன்றில் தடுத்து வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே மேலும் உத்தரவிட்டுள்ளார்.

தொலைபேசிகளை கையளித்த பின்னர் குறித்த சந்தேக நபர்களை விடுவிக்குமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.

Share.
Exit mobile version