தங்களது சுதந்திர தினத்தின்போது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், அதற்கான பதிலடி மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

உக்ரைனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள போலந்து ஜனாதிபதி அண்ட்ரேஸ் டூடாவுடன் இணைந்து தலைநகர் கீவில் செய்தியாளர்களை சந்தித்த ஜெலென்ஸ்கி, இதனை தெரிவித்தார்.

சோவியத் யூனியனிலிருந்து பிரிந்ததை சுதந்திர தினமாக உக்ரைன் இன்று கொண்டாடுகிறது.

இதை முன்னிட்டு, ரஷ்யா மிக மோசமான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்றும், இத்தகைய நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டால், சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Share.
Exit mobile version