ஐரோப்பாவில் 500 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான வறட்சி ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பியக் கண்டத்தின் பாதிப் பரப்பளவுக்கு மோசமான வறட்சி பரவக்கூடும் என்று ஐரோப்பிய வறட்சி கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பால பகுதிகளில் நிலவும் அதீத வெப்ப அலையால் பல பகுதிகள் கடும் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆறுகள், நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு நீர்மட்டம் குறைந்து, நீர்மின் உற்பத்தி மற்றும் உள்நாட்டு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மண்ணின் ஈரப்பதமும் வறண்டு கோடைகால பயிர்களான சோயாபீன், சூரியகாந்தி, சோளம் உள்ளிட்ட பயிர்களின் விளைச்சல் குறைந்துள்ளதோடு, காட்டுத்தீ ஏற்படக்கூடிய மோசமான விளவுகளும் ஏற்பட்டுள்ளன.

Share.
Exit mobile version