யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி இன்று காலை (24) பயணித்த ராணி புகையிரதத்தில் பயணித்த சிலர் பளை புகையிரத நிலையத்தில் இடை நடுவில் இறங்கி தப்பியோடியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுண, வழமை போன்று யாழ் ராணி புகையிரதத்த்தில் கிளிநொச்சி நோக்கி பயணித்த உத்தியோகத்தர்களில் சிலர் பயணச் சீட்டு பெற்றுக்கொள்ளாது பயணித்துள்ளனர்.

மிக குறைந்த கட்டணமாக உள்ள போதும் அதனை பெற்றுக்கொள்ளாது பயணித்துள்ளனர்.

ஆனால் இன்றைய தினம் பயணச் சீட்டு பரிசோதனை செய்யும் புகையிரத திணைக்கள அதிகாரிகள் பயணிகளிடம் பரிசோதனைகளை மேற்கொண்ட போது ஒரு சிலர் பயணச்சீட்டு இன்றி பயணித்தமை கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் பயணக்கட்டணமும் தண்டப் பணமும் அறவிடப்பட்டடுள்ளது.

அத்தோடு மூன்றாம் வகுப்புக்கு பயணச்சீட்டைப் பெற்றுவிட்டு இரண்டாம் வகுப்பில் பயணித்தவர்களும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கிளிநொச்சி நோக்கி பயணித்த மேலும் சிலர் புகையிரத திணைக்கள அதிகாரிகளின் பரிசோதனைக்கு முன்பாகவே இடைநடுவில் பளை புகையிரத நிலையத்தில் இறங்கி சென்றமையினையும் அவதானிக்க முடிந்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share.
Exit mobile version