சுமார் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் பெறுமதியான மோட்டார் மற்றும் மின் உபகரணங்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்களை காரைதீவு பொலிஸார் இன்று(22) கைது செய்துள்ளனர்.

அம்பாறை – காரைதீவு பொலிஸ் எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் உள்ள உருக்கு இரும்பு தொழிற்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) அதிகாலை இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய தொழிற்சாலை உரிமையாளரால் இந்த சம்பவம் தொடர்பில் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டீ.ஜே.ரத்னாயக்க தலைமையிலான குழுவினரால் விசாரணைகள் முன்னனெடுக்கப்படுகின்றது.

இதன்போது கொள்ளைச் சம்பவத்தினுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இனங்காணப்பட்ட நிலையில் அவருடன் இணைந்து செயற்பட்ட ஏனைய நால்வர் இனங்காணப்பட்டு இன்று காரைதீவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பல வருடங்களாக தொழிற்சாலையில் பணியாற்றி வருவதாகவும் சுமார் ஒருகோடியே ஐம்பது இலட்சம் பெறுமதியான மோட்டார், உபகரணங்கள் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது எனவும் சந்தேக நபர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மீட்கப்பட்ட சான்று பொருட்கள் யாவும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காரைதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share.
Exit mobile version