இந்தியக் கடன் வரியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் 21,000 மெட்ரிக் டொன் யூரியா உரம், தேயிலை மற்றும் சோளப் பயிர்ச்செய்கைகளுக்காக உள்ளூர் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என வர்த்தக உர நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் மகா அறுவடைக் காலத்திற்காக 8 மாவட்டங்களில் 21,200 ஏக்கர் தரிசு நெற்செய்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
சுமார் 100,000 ஏக்கர் பயிர் செய்யப்படாத தரிசு வயல் நிலங்கள் உள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை மேல் மாகாணத்தில் அமைந்துள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.