தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கூற்றுப்படி, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணத்தை வசூலித்த 100க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடு தழுவிய ரீதியிலான சோதனைகளின் போது இந்த பேருந்துகள் அடையாளம் காணப்பட்டதாக அதன் பணிப்பாளர் நாயகம் டாக்டர் நிலான் மிராண்டா தெரிவித்தார்.

மேலும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலித்தல், விலையை காட்டாமல், டிக்கெட் வழங்காததால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் மேலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Share.
Exit mobile version