எதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான உரங்களை விவசாயிகளுக்கு தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (20) அறிவித்தார்.

கலந்துரையாடலில், விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், மகா விகாரையின் நிர்மாணப் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்று உறுதியளித்த அவர், மியன்மார் மற்றும் பிற நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவைகள் சுற்றுலாத் தலமாக மாறும் என்றும் கூறினார்.

உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் உர மானியம் தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேயிலை, தென்னை, இறப்பர் போன்ற பயிர்களை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாகத் தெரிவித்த அவர், விதைகளை இறக்குமதி செய்வதற்கும் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடுகள் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share.
Exit mobile version