மின்சார நுகர்வோரின் உரிமைகளை மீறும் பொறுப்பு வாய்ந்த அரச நிறுவனங்களுக்கு எதிராக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அடிப்படை உரிமைகள் (FR) மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை தொடர்ச்சியாக வழங்குமாறு எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவுக்கு உத்தரவிடுமாறு PUCSL உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவில் கோரியுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறையால் நாடு முழுவதும் தினமும் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுகிறது.

நாட்டில் உள்ள பல மின் உற்பத்தி நிலையங்கள் எரிபொருள் பற்றாக்குறையால் செயல்படாமல் உள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக அரசாங்கத்தினால் தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய முடியவில்லை.

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட நேரம் மின்வெட்டு மற்றும் வரிசையில் நிற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Share.
Exit mobile version