இந்திய கடன் உதவிக்கு ஏற்ப 21,000 மெட்ரிக் டொன் யூரியாவை ஏற்றிய கப்பல் நேற்று (19) இரவு இலங்கையை வந்தடைந்தது.

தேயிலை மற்றும் சோளம் பயிர்ச்செய்கைக்கு இந்த உரம் பயன்படுத்தப்படும் என கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

‘சிறு தேயிலை அபிவிருத்தி அதிகார சபையின்’ ஊடாக தேயிலை விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்கப்படும்.

இதன்படி, தேயிலை விவசாயிகளுக்கு 50 கிலோ யூரியா உர மூட்டையை தலா 15,000 ரூபா விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விஜேகுணவர்தன தெரிவித்தார்.

மக்காச்சோள விவசாயிகளுக்கு வேளாண்மை வளர்ச்சி மையங்கள் மூலம் உரங்கள் வழங்கப்படும்.

இந்திய கடன் உதவியின் கீழ் 65,000 மெட்ரிக் டொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது, அதில் 40,000 மெட்ரிக் டொன்கள் முன்னரே இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன.

Share.
Exit mobile version