கொழும்பு புறக்கோட்டைக்கு வரும் பாதசாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி போக்குவரத்து தலைமையகத்தால் நடைபெற்றது.
அங்கு, போக்குவரத்து விதிகளின்படி, பாதசாரிகள் வீதிகளைக் கடக்கிறார்களா என கடுமையாக சோதனை செய்யப்பட்டது.பல பாதசாரிகள் போக்குவரத்து விதிகளை மீறி, சிவப்பு சமிக்ஞைகள் எரியும் போது சாலையைக் கடப்பதைக் காண முடிந்தது. மேலும் அவர்களுக்கு போக்குவரத்து விதிகள் மற்றும் வீதியைக் கடப்பது குறித்து காவல்துறையினரிடமிருந்து கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது.
போக்குவரத்து விதிகளை மீறி வீதிகளைக் கடப்போரின் அடையாள அட்டை மற்றும் பிற விபரங்கள் கணினிமயமாக்கப்பட்டு மீண்டும் போக்குவரத்து விதிகளை மீறுவார்களாயின் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.