முட்டை ஒன்றின் விலை திங்கட்கிழமை (22) முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.

முட்டை ஒன்றின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவை அறிவித்தது.

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், கால்நடை வைத்தியர் சங்கம், கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம், மற்றும் ஏனைய உணவு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

கோழி தீவன தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை விலையை உயர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதன்மூலம், ஒரு முட்டைக்கு 60 ரூபாய் வசூலிக்கப்படுவதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனிடையே முட்டை உற்பத்தியாளர்கள் விலையை குறைக்காவிட்டால் முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை அறிமுகப்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் எச்சரித்துள்ளார்.

Share.
Exit mobile version