இலங்கை எதிர்கொண்டுள்ள தற்போதைய நெருக்கடியை கருத்தில் கொண்டு அவசர உணவு மற்றும் மருந்துதேவைகளிற்கு உதவுவதற்காக 25 பில்லியன் டொலர்களை அவுஸ்திரேலியா வழங்கவுள்ளதாக
அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரும் சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசுபிக்கிற்கான அமைச்சரும் இணைந்து இதனை அறிவித்துள்ளனர்.

இந்த சவாலான தருணத்தில் அவுஸ்திரேலியா இலங்கை மக்களுடன் இணைந்திருக்கின்றது குறிப்பாக கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மக்களுடன் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இந்த மேலதிக உதவியை தொடர்ந்து அவுஸ்திரேலியா இதுவரை 75 மில்லியன் டொலர் உதவியை வழங்கியுள்ளது.

எங்களின் உதவி உணவு ,சுகாதாரம் , போசாக்கு, பாதுகாப்பான குடிநீர் , பெண்கள், குழந்தைகள் உட்பட ஆபத்தான நிலையில் உள்ளவர்களிற்கான அவசிய உதவி போன்றவற்றை ஐநா அமைப்புகளின் ஊடாக வழங்கும் என அவுஸ்திரேலிய தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version