மதுபோதையில் தனது நண்பர்களுடன் பின்லாந்தின் பெண் பிரதமர் சன்னா மரீன் நடனமாடும் வீடியோ வெளியானதால், பிரதமர் பதவிக்கு அவமரியாதையும், களங்கத்தையும் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டுள்ளார் என அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பும் , விமர்சனங்களும் கிளம்பியுள்ளது.
சர்ச்சையை தொடர்ந்து பிரதமர் சன்னா மரீன் அதற்கான விளக்கம் அளிக்கையில், “நான் போதைப்பொருளையோ, மதுவைத் தவிர வேறு எதையும் பயன்படுத்தவில்லை. நான் நடனமாடினேன், பாடினேன், பார்ட்டி செய்தேன், சட்டப்படியான விஷயங்களைச் செய்திருக்கிறேன்.
எனக்கு ஒரு குடும்ப வாழ்க்கை உள்ளது, எனக்கு ஒரு வேலை வாழ்க்கை உள்ளது மற்றும் எனது நண்பர்களுடன் செலவிட எனக்கு ஓய்வு நேரம் உள்ளது. என் வயதுடைய பலரைப் போலவே நான் எனது வாழ்க்கையை தீர்மானித்து வைத்துள்ளேன் அதன்படியே வாழ்ந்தும் வருகின்றேன் இதனை நீங்கள் ஏற்பீர்கள் என்றும் நம்புகின்றேன்”என அவர் கூறினார்.