காதலி உயிரிழந்த சோகத்தில் 10ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

காதலியை அடக்கம் செய்த இடத்திலேயே தன்னையும் அடக்கம் செய்யுமாறு அந்தச் சிறுவன் உருக்கமாக பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

தமிழகத்தின் தென்காசி மாவட்டம், மடத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கபிலன் என்பவரின் 16 வயது மகனே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

குறிப்பிட்ட சிறுவன் இன்னொரு சிறுமியைக் காதலித்து வந்துள்ளார். அந்தச் சிறுமி அண்மையில் உயிர் இழந்ததையடுத்து, அந்த சோகத்திலேயே இருந்த சிறுவன், தன் கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டிக்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுவிட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அந்த வீடியோவில், “என் காதலி இறந்த சோகத்தில் நானும் தற்கொலை செய்து கொள்கிறேன். என் காதலியை புதைத்த இடத்திலேயே என்னையும் புதைத்து விடுங்கள்” என உருக்கமாகப் பேசி உள்ளார். இதனிடையே சிறுவனின் பெற்றோர் சிறுவனின் தற்கொலையை மறைத்து அடக்கம் செய்ய முயன்றுள்ளனர். இதுகுறித்து தேவகுளம் பொலிஸாருக்குப் புகார் சென்றுள்ளது. அவர்கள் சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

காதலியின் மரணத்தால் சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Share.
Exit mobile version