ஜூலை மாதத்தில் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 1.8 பில்லியன் டொலர்களாக உள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

“இது சுமார் $1.5 பில்லியன்களுக்கு சமமான சீனாவின் மக்கள் வங்கியின் இடமாற்று வசதியை உள்ளடக்கியது” என்று இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.

பயன்பாட்டிற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட இடமாற்று வசதியை கழித்தால், இலங்கை தனது கையிருப்பில் $300 மில்லியன் டாலர்களை நெருங்கி உள்ளது.

இன்று (18), வியாழன் இலங்கை மத்திய வங்கி அதன் பணவியல் கொள்கை மதிப்பாய்வில், தொழிலாளர்களின் பணம் வரவு ஜூலை மாதம் ஈட்டியதை விட குறைவாக இருப்பதாகவும், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டியது. இலங்கையின் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கு இரண்டு துறைகளும் முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version