கடந்த ஜூன் மாதத்திற்கான அறிக்கையின்படி, தனிநபர் ஒருவரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்தபட்ச மாதச் செலவு 12,444 ரூபா என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவிக்கிறது.
அதற்கைமய, கொழும்பு மாவட்டத்தில் வசிப்பதற்காக ஒருவருக்கு அதிகபட்சமாக 13,421 ரூபா தேவைப்படுவதாகவும், இது இலங்கையின் மாவட்டமொன்றில் நபரொருவர் தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக செலவிடும் அதிகூடிய தொகை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் வாழ்க்கைச் செலவு தேசிய மதிப்பீடாக 12,444 ரூபாவை விட 977 ரூபா அதிகமாகும்.
எனினும், இந்த அறிக்கையின் பிரகாரம், மொனராகலை மாவட்டத்தில் வசிக்கும் ஒருவருக்கு தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு அங்கு வசிப்பதற்கு 11,899 ரூபா போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில், ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்வதற்குத் தேவையான தொகை 1,225 ரூபாவினால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த புள்ளிவிபரங்களின்படி, ஜூலை மாதத்தில் நபரொருவர் தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய செலவழிக்கும் சராசரி விலை இதைவிட அதிகமாக இருக்கும் என்று அனுமானிக்க முடிகிறது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் 60.85 ஆக உயர்ந்துள்ளது்டன், உணவுப் பணவீக்கம் 90.9% ஆக உயர்ந்துள்ளது.