மகாநாயக்க தேரர்களினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமுல்படுத்தாவிட்டால் அடுத்த வாரம் நாடு தழுவிய ரீதியில் பேரூந்து சேவைப்புறக்கணிப்பை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரித்;துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும்,ஏற்கனவே ஏப்ரல் 4ஆம் திகதியன்று தங்களால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளை அமுல்படுத்துமாறு பீடாதிபதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முன்மொழிவுகள் தொடர்பில் அரசியல் தலைமைகள் செயற்படத் தவறினால், பௌத்த சங்க மாநாடு ஒன்று கூட்டப்பட்டு பிரகடனம் வெளியிடப்படும் என்றும் மகாநாயக்க தேரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் நடப்பு அரசாங்கத்திடம்; பொருளாதாரத்தை மீட்பதற்கான சரியான திட்டம் எதுவும் இல்லாத நிலையில்,அரசாங்கத்தை முன்னோக்கி நகர்த்த முடியவில்லை.

இதனால் ஏனைய துறைகளை போன்று பேரூந்து துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.

செவிப்புலனற்ற, பார்வையற்றவர்களைப் போல மக்களால் வாழ முடியாது.

எனவே, இந்த வாரத்தில் ஏனைய சங்கங்களுடன் பேச்சு நடத்தி தீர்மானத்தை நிறைவேற்றவுள்ளதாக விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version