தெற்கு தாய்லாந்தில் இன்று ஏற்பட்ட பல குண்டுவெடிப்புகள் மற்றும் தீ வைப்புத் தாக்குதல்களால் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இருப்பினும் அங்கு வசிக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தாய்லாந்தின் பாங்கொக்கில் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக ராஜினாமா செய்யுமாறு கோரி பல அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து ஜூலை மாதம் இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற அவர் ஒரு வாரத்திற்கு முன்பு தாய்லாந்திற்கு வந்தார்.
மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற அவர், சிங்கப்பூர் சென்று, ஒரு வாரத்துக்கு முன்பு விசிட் விசாவில் தாய்லாந்தின் பாங்காக் வந்தடைந்தார்.
பாங்காக் வந்தடைந்தவுடன், கோட்டாபய ராஜபக்சவை அவரது தங்குமிடத்திலேயே இருக்குமாறும், வெளியில் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி அடுத்த வாரம் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 24ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.