இலங்கையில் நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எமது அயல் நாடான இலங்கையில் நடப்பவை, இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் எந்த வளர்ச்சியாக இருந்தாலும் நாங்கள் மிக கவனமாக அவதானித்து வருகின்றோம் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் இலங்கைக்கு வந்துள்ள நிலையில், பதில் நடவடிக்கையாக இந்தியா ராமேஸ்வரம் பகுதியில் தனது கடற்படையினரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதுடன் கண்காணிப்புகளையும் அதிகரித்துள்ளது.

மேலும் இந்திய கடற்படையின் உலங்குவானூர்திகள் இலங்கையின் வடக்கில் அமைந்துள்ள இந்தியாவின் தென் பகுதி கடல் எல்லையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Share.
Exit mobile version