உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பிஸ்கட் மற்றும் பிற இனிப்பு வகைகளின் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளின் அதிக விலை தொடர்பான குற்றச்சாட்டுகளை தற்போது நிவர்த்தி செய்துள்ளனர்.

டொலர் நெருக்கடிக்கு மத்தியில் உற்பத்திக்காக ‘ஏ’ தர கோதுமை மாவை இறக்குமதி செய்ததன் விளைவாக பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மே மாதத்தில் கோதுமை மாவின் விலை ரூ. 74, தற்போது இதன் விலை ரூ. 290-300 ஆகும்.

“இது 277% விலை உயர்வு” என்று உள்ளூர் உற்பத்தியாளர்கள் ஊடகங்களுக்கு உரையாற்றினர்.

டொலர் நெருக்கடியின் போது தரமான கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்ட தொகையே தமது உற்பத்திப் பொருட்களின் விலையை உயர்த்தியதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Share.
Exit mobile version