நாட்டில் மீண்டும் நிலைமை சீரடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாட்டில் மீண்டும் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது..

இந்த வார இறுதியில் காலாவதியாகவிருந்த அவசரகாலச் சட்டம் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதியுடன் அவசரகாலச் சட்டம் முடிவுக்கு வருகிறது.

கடந்த ஜூலை 18 ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் ஜுலை 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் நாடாளுமன்றம் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனப்படி எதிர்வரும் 18 ஆம் திகதியுடன் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஒரு மாதம் பூர்த்தியாகின்றது.

அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் ஒரு மாத காலம் பூர்த்தியாகும் முன்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version