பொதுமக்கள் தமது கையில் பணமாக வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி 15,000 டொலர்களில் இருந்து 10,000 டொலர்களாகக் குறைக்கப்பட்டுளளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அவ்வாறு பணமாக வைத்திருக்கும் டொலர்களை வங்கியின் வெளிநாட்டுக்கணக்கில் வைப்புச்செய்வதற்கோ அல்லது ரூபாவாக மாற்றுவதற்கோ இருவார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு வெளிநாட்டு நாணயத்தை வங்கியில் வைப்புச்செய்யாமல் கைகளில் வைத்திருப்பவர்கள், அந்த பணம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பதைத் தெளிவுபடுத்துவதற்கும் இருவார கால அவகாசம்

இருவாரத்தின் பின்னர் வெளிநாட்டு நாணயத்தை கைகளில் வைத்திருப்பவர்களிடமிருந்து தண்டப்பணம் அறவிடப்படுவதுடன், அது கைகளில் வைத்திருக்கும் தொகையைவிடவும் அதிகமானதாக அமையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version