இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிரான வௌிநாட்டுப் பயணத் தடையை கோட்டை நீதவான் நீதிமன்றம் மீண்டும் நீடித்துள்ளது.

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு இன்றையதினம் (25) எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குறித்த தடையை வழக்கு விசாரணை முடியும் வரை நீடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதது.

குறித்த வழக்கு தொடர்பில் அஜித் நிவாட் கப்ராலுக்கு இரு முறை அழைப்பாணை விடுக்கப்பட்ட போதிலும் இன்றையதினமும் நீதிமன்றில் ஆஜராகாத நிலையில், எதிர்வரும் ஜூன் 07ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு இன்றையதினம் (25) அழைப்பாணை விடுக்கப்பட்டது. அத்துடன், அவரது கடவுச்சீட்டையும் நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக 2006 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அமைச்சரவையின் அல்லது நிதிச் சபையின் அனுமதியின்றி அமெர்காவின் இமாத் ஷா சுபைரிக்கு, இலங்கை அரசின் 6.5 மில்லியன் டொலர்களை செலுத்தியதன் மூலம், குற்றவியல் சட்டத்தின் கீழ், அஜித் நிவாட் கப்ரால் குற்றத்தை புரிந்துள்ளதாக அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version