அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்வதற்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை கிடைத்துள்ளதாக எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 சுயேட்சை உறுப்பினர்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த கிரியெல்ல, பிரேரணை எவ்வாறு முன்வைக்கப்படும், அது சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் ஏற்படும் நிலைமைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க பல அரசியல் கட்சிகள் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share.
Exit mobile version