ஆறு மாதங்களிற்கு இடைக்கால அரசாங்கத்தினை அமைப்பதற்கான யோசனையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதமரின் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை ஆறு மாதங்களிற்கு ஏற்படுத்துவதற்கான யோசனையை முன்னாள் ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.
நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் முட்டுக்கட்டை நிலையை முடிவிற்கு கொண்டுவருவதற்காக அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
கடிதமொன்றில் தனது யோசனைகளை தெரியப்படுத்தியுள்ள முன்னாள் பிரதமர் தீர்வுகளை காண்பதற்கும் கூடியவிரைவில் நாட்டிற்கு தீர்வுகளை முன்வைப்பதற்காகவும் இணைந்து செயற்படுவதற்கு எங்களி;;ற்கு உள்ள கடப்பாட்டினை நாங்கள் புறக்கணிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நான் பலகலந்துரையாடல்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பின்னர் ஆழ்ந்த யோசனைக்கு பின்னர்-காலிமுகத்திடலில் உள்ள இளைஞர்கள் பெரியவர்களின் கோரிக்கைகளை-மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் சமூகத்தின் பல துறை தலைவர்களின் கோரிக்கைகளை கருத்தில்கொள்ளும் முன்மொழிவை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது யோசனைகளை முன்வைக்கும் முன்னர் தான் யாருடன் கலந்துரையாடினார் என்பதை முன்னாள் ஜனாதிபதி தெரிவிக்கவில்லை.
இளைஞர்கள் முதிய தலைமுறையின் வேண்டுகோள்களிற்கும் அரசியல்வாதிகள் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கரிசனைகளிற்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தக்கூடிய யோசனைகளை முன்வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் எண்ணிக்கையை 12ஆக கட்டுப்படுத்தும் தற்போயைத நாடாளுமன்றத்திலிருந்து அவர்களை தெரிவு செய்யும் யோசனையை அவர் முன்வைத்துள்ளார்.
இடைக்கால அரசாங்கம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான யோசனைகளை முன்வைக்கவேண்டும்,என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய கொள்கைகளிற்கான அரசபேரவையை ஏற்படுத்தவேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ள முன்னாள்ஜனாதிபதி கொள்கைகளை வகுப்பது நடைமுறைப்படுத்துவது உட்பட அனைத்து விடயங்களிலும் அமைச்சரவை தேசிய கொள்கைகளிற்கான அரசபேரவையை கருத்தில்கொள்ளவேண்டு;ம் என தெரிவித்துள்ளார்.