மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பிரதமர் பதவியில் நீடிக்கவேண்டும் என்பதற்கு ஆதரவாக பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்களை பெறும் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
பிரதமராக மகிந்த ராஜபக்ச நீடிக்கவேண்டும் என ஜனாதிபதியை வலியுறுத்தும் நோக்கிலேயே கையெழுத்துக்களை பெறும் முயற்சி இடம்பெற்றுள்ளது.
கட்சியின் தலைமையகத்தில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது – ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் – சமீபத்தில் கட்சியிலிருந்து விலகிச்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரையும் இந்த ஆவணத்தில் கையெழுத்திடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அவர்கள் இன்று ஜனாதிபதியிடம் அந்த ஆவணத்தை வழங்க திட்டமிட்டிருந்தனர்.
எனினும் 50க்கும் குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்களே அதில் கைச்சாத்திட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகிந்தராஜபக்சவை பிரதமராக நீடிக்க செய்வதற்கு பசில் ராஜபக்ச மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.