பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையெனவும், சிறுபான்மை ஆதரவைக் கொண்ட பிரதமர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, சபாநாயகரிடம் சத்தியக்கடதாசியை கையளிக்கவுள்ளனர்.

அந்த சத்தியக்கடதாசியில் கைச்சாத்திட இணக்கம் தெரிவித்துள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 115 யை கடந்துவிட்டதாகவும் அறியமுடிகின்றது. கையொப்பம் இடப்படும் சத்தியக்கடதாசி, அடுத்தவாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்நிலையில், பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலக வில்லையெனில், பிரதமருக்கு எதிரான நம்பிக்கை பிரேரணையில் கையொப்பம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை, நாளை (25) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆளும் தரப்பிலிருந்து வெளியேறி, எதிரணியில் சுயாதீனமாக இயங்கும் குழுவும் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.

கையொப்பம் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, அடுத்த பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளிலேயே கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அறியமுடிகின்றது.

Share.
Exit mobile version