ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு நாம் விரட்டி அடிக்கும் வரை மக்கள் ஓயாமல் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் அமைச்சரான மங்கள சமரவீரவினுடைய 66 ஆவது பிறந்தநாள் நினைவு தினத்தினை ஓட்டி கொழும்பில் நேற்று முன் தினம் (21) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில் ,

“தனக்கு எதிரான மக்களினது தன்னெழுச்சி மிக்க ஆர்ப்பாட்டத்தினை துப்பாக்கி முனையில் அடக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்.

ரம்புக்கனை சம்பவத்தினூடாகத் தானொரு கொலைகாரன் தான் என்பதினை ஜனாதிபதி மீண்டும் நிரூபித்துகாட்டியுள்ளார்.

‘கோ ஹோம் கோட்டா’ (Go Home Gota) என்ற கோஷத்துடன் கொழும்பு – காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவினை மக்கள் தந்து போராட்டத்தினை வலுவடைய செய்துள்ளனர்.

இந்த விடையம் ஜனாதிபதிக்கும் அவருடைய தலைமையிலான அரசுக்கும் சர்வதேச அரங்கில் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியிருக்கின்றது .

இதைப் பொறுக்க முடியாத கோட்டாபய அரசு, மக்களை வன்முறைக்கு இழுத்து அவர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தினை துப்பாக்கி முனையில் அடக்குகின்றது.

ஆகவே தான் , மக்கள் வன்முறைகளில் இறங்காமல் அமைதியான ,முறையிலும் – ஜனநாயகமான வழியிலும் தொடர்ந்து போராட வேண்டும்.இந்த கொலைகாரக் கோட்டபாயவை வீவீட்டுக்கு நாம் விரட்டி அடிக்கும் வரை மக்கள் ஓயாமல் போராட வேண்டும்”எனவும் தனதுரையில் தெரிவித்தார்.

Share.
Exit mobile version