இலங்கையில் மருந்து பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் உதவுவதற்கு முன்வந்துள்ளது.

இதன்படி, இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 101 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைப் பொருட்கள் அடங்கிய உதவி எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை வந்தடையும் என அரசாங்கம் கூறியுள்ளது.

சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண இதனை தெரிவித்துள்ளார். மேலும் இந்தோனேசியாவினால் வழங்கப்பட்ட 340 மில்லியன் பெறுமதியான மருந்துகளும் ஒரு வாரத்திற்குள் பெற்றுக்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது 20 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், விரும்பிய நன்கொடையாளர்கள் தமக்கு தேவையாக மருந்து வகைகளை வழங்கி உதவுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version