ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டின் போது நான்கு T-56 துப்பாக்கிகள் மற்றும் 35 தோட்டாக்கள் பொலிஸாரால் பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

றம்புக்கணை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் விசேட பொலிஸ் குழு இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொலிஸ்மா அதிபர் சி டி விக்ரமரத்ன மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் முன்னிலையாகி உள்ளார்.

றம்புக்கனையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் வாக்குமூலம் ஒன்்றை வழங்குவதற்காக அவர் இவ்வாறு முன்னிலையாகி உள்ளார்.

சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு சம்பவ இடத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், குறித்த குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்கவுள்ளது.

றம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நாரண்பெத்த பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்த லக்ஷான் என்பவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

Share.
Exit mobile version