கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அடுத்த வாரம் முதல் மீண்டும் இயங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டிற்கு வந்துள்ள கச்சா எண்ணெய்யை இறக்கியதன் பின்னர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

100,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் நேற்றிரவு (13) தீவை வந்தடையத் திட்டமிடப்பட்டிருந்தது. மேலும் அதன் மாதிரிப் பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், 120,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு மற்றொரு கப்பல் ஆகஸ்ட் 23 மற்றும் 29 ஆம் தேதிகளுக்கு இடையில் நாட்டை வந்தடைய உள்ளது.

இவற்றின் அடிப்படையில், அடுத்த வார நடுப்பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.

Share.
Exit mobile version