இலங்கையில் மிகவும் பயனுள்ள அரச சேவையை உருவாக்குவதற்கான பிரேரணை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது யோசனையை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் முன்வைத்துள்ளார்.

பொதுத் துறையில் கள உத்தியோகத்தர்களாகப் பணிபுரிபவர்கள் வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் தங்களுடைய வசிப்பிடத்திலிருந்து வேலை செய்வதற்குப் பதிலாக 5 நாட்களும் அவர்களின் நிரந்தர பணியிடங்களில் வேலை செய்ய அனுமதித்தால் அதிக ஆக்கப்பூர்வமாக வேலை செய்ய முடியும் என அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கள உத்தியோகத்தர்களாக கடமையாற்றுபவர்கள் அந்தந்த கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கடமையாற்றுவதற்கு இயலுமைப்படுத்தப்பட்டால், அதன் மூலம் அதிக உற்பத்தியான பொது சேவையை வழங்க முடியும் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த பிரேரணையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பரிசீலிக்குமாறு பொது நிர்வாக அமைச்சர் என்ற வகையில் பிரதமரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share.
Exit mobile version