லெஜண்ட் சரவணன் முதல் முறையாக நடித்துள்ள திரைப்படம் ‘தி லெஜண்ட்’.

ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப் படம் உருவாகியுள்ளது. மிகப்பிரமாண்டமாக தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் 2500க்கும் அதிகமான திரையரங்குகளில் ஜூலை 28ஆம் திகதி வெளியாகி இரு வகை விமர்சனங்களையும் பெற்றது.

இந்நிலையில், லெஜண்ட் சரவணன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் ,இயக்குனரிடம் சமூக அக்கறையுள்ள படமாக அமைய வேண்டும் என கோரிக்கை விடுத்து லெஜண்ட் சரவணன் தற்போது கதை கேட்க தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version